இன்றும் சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. வாங்க பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. ஏன்?

தங்கம் விலையானது (gold) பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் சரிவில் காணப்படுகிறது. இது மேற்கொண்டு விலை சரியுமா? இந்திய கமாடிட்டி சந்தையில் என்ன நிலவரம், ஆபரண தங்கம் விலை என்ன நிலவரம்?

கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன ? இந்த இடத்தில் வாங்காலாமா?

இனி குறைய வாய்ப்பிருக்கிறதா? அடுத்து என்ன செய்யலாம்? முக்கிய லெவல்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

உணவு, பிட்காயின், தங்கம், வெள்ளியை வாங்கி வைங்க.. ஏன்.. பிரபல எழுத்தாளர் சொல்லும் காரணத்தை பாருங்க!

தங்கம் விலை சரிவு?

தங்கம் விலை சரிவு?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. இது மேற்கொண்டு சரியுமா? என்பது தான் பெரிய கேள்வியாகவே உள்ளது. டாலரின் மதிப்பு சற்று சரிவினைக் கண்டிருந்தாலும், அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது.

பங்கு சந்தைகள் ஏற்றம்

பங்கு சந்தைகள் ஏற்றம்

கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது தங்கத்தில் முதலீடுகாள் குறைய வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் கட்டாயம் அதிகரிக்கப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதுவும் டாலருக்கு சாதகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

5 அமர்வுகளுக்கு பிறகு சரிவு ஏன்?
 

5 அமர்வுகளுக்கு பிறகு சரிவு ஏன்?

மேற்கண்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தான் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் 5 அமர்வுகளுக்கு பிறகு சரிவில் காணப்படுகிறது. அதோடு உக்ரைன் அதிபர் ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். பேச்சு வார்த்தை நடத்தப்பட்டால் இது விரைவில் சுமூக நிலையை எட்ட வழிவகுக்கலாம் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.ஆக முதலீட்டாளர்களின் பார்வை இது ஏதேனும் அறிவிப்பு வருமா? என்று எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுமேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

தங்கம் விலையானது 1868 டாலர்கள் என்ற லெவலை உடைத்தால், அடுத்ததாக 1885 மற்றும் 1900 டாலர்களை எட்டலாம் என டிரேட் புல்ஸ் செக்யூரிட்டீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் தொடர்ந்து 1850 டாலர்களுக்கு கீழாகவே இருந்து வந்தால் இது 1820 மற்றும் 1800 டாலர்களையும் தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

சர்வதேச சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் டெக்னிக்கலாக தங்கம் விலையானது சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. இந்திய கமாடிட்டி சந்தையிலும் அதேபோல தான் காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று சரிவினைக் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் மத்திய வங்கியின் நடவடிக்கையினை பொறுத்து இருக்கலாம்.

 காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 4.06 டாலர்கள் குறைந்து, 1861.26 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது.எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்தபட்ச விலையினையும் உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.050 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி குறைந்து காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 74 ரூபாய் குறைந்து, 51,083 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று குறைந்தே காணப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 2 ரூபாய் குறைந்து, 61,974 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 1 ரூபாய் அதிகரித்து, 4836 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 38,688 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 5276 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 42,208 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே போல வெள்ளி விலையிலும் இன்று இதுவரையில் மாற்றமின்றி காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 66.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 661 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 66,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், எனினும் மீடியம் டெர்மிலும் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 25th may 2022: gold prices fall on weak global cues, buy on dips

Gold prices are slightly lower in the international and Indian markets. The price of the same jewelry gold has not seen a big change so far.

Story first published: Wednesday, May 25, 2022, 10:51 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.