இலங்கையின் பொருளாதார நிலை குறித்து இந்தியா – இலங்கை விசேட பேச்சு


இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்தி இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் புதிய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவாத்ராவை புது தில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார்.

முன்னதாக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுக்குப் பிறகு உயர் பதவிக்கு சமீபத்தில் நியமிக்கப்பட்ட வெளியுறவு செயலாளர் குவாத்ராவுக்கு இலங்கையின் உயர் ஸ்தானிகர் மொரகொட வாழ்த்து தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து இந்தியா - இலங்கை விசேட பேச்சு

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ​​உயர்ஸ்தானிகரும் வெளிவிவகாரச் செயலாளரும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு உயர்ஸ்தானிகர் மொரகொட நன்றி தெரிவித்தார்.

2021/2023 இல் இந்தியாவில் உள்ள இலங்கை இராஜதந்திர தூதரகங்களுக்கான ஒருங்கிணைந்த நாட்டு மூலோபாயம்” என்ற தனது கொள்கை வரைபடத்தின் நகலை இலங்கை உயர் ஸ்தானிகர் இந்திய வெளிவிவகார செயலாளரிடம் வழங்கினார்.

இந்தியாவின் 34வது வெளியுறவுச் செயலாளராக ஸ்ரீ வினய் குவாத்ரா நியமனம்

இந்திய வெளியுறவுத் துறையின் 1988 பேட்ச் அதிகாரியான ஸ்ரீ வினய் குவாத்ரா இந்தியாவின் 34வது வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளர்.

அவர் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, குவாத்ரா நேபாளத்திற்கான இந்திய தூதராக பணியாற்றினார். முன்னதாக, அவர் பிரான்சுக்கான இந்திய தூதராகவும், பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராகவும் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து இந்தியா - இலங்கை விசேட பேச்சு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.