கொழும்பு-இலங்கையில் இம்மாத துவக்கத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
நம் அண்டை நாடான இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, கொழும்புவில் உள்ள அவரது அலுவலகத்தின் முன் ஏராளமானோர் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். அதுபோல, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவின் வீட்டின் முன்பாகவும் போராட்டம் நடந்தது.
கடந்த, 9ம் தேதி மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்கினர். இதையடுத்து வெடித்த வன்முறையில் 10 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக மகிந்த ராஜபக்சேவிடம் குற்றப்பிரிவு போலீசார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர். வன்முறை தொடர்பாக ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் மூன்று பேருக்கு நெருக்கமான இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று மகிந்த ராஜபக்சேவின் மகனும், முன்னாள் அமைச்சருமான நமல் ராஜபக்சே அளித்த வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துஉள்ளனர். ‘கலவரத்திற்கு எதிர்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா காரணம்’ என, ஆளும் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. ஆனால் அதை எதிர்கட்சி மறுத்துள்ளது.
ராணுவ தளபதி ராஜினாமா
இலங்கை ராணுவ தளபதி சுவேந்திர சில்வா, வரும் 31ம் தேதி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து மேஜர் ஜெனரல் விகம் லியனகே, புதிய ராணுவ தளபதியாக பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ தளபதி ராஜினாமா
இலங்கை ராணுவ தளபதி சுவேந்திர சில்வா, வரும் 31ம் தேதி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து மேஜர் ஜெனரல் விகம் லியனகே, புதிய ராணுவ தளபதியாக ஜூன் 1ல் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement