இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் – பாலஸ்தீனர்கள் இடையே நடந்த மோதலில் 16 வயது சிறுவன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தான்.
மேலும், 80 பேர் படுகாயமடைந்தனர். மேற்குகரையின் நப்லுஸ் நகரில் உள்ள யூத மத வழிப்பாட்டு தலத்திற்கு பாதுகாப்பு படையினரோடு சென்ற இஸ்ரேலியர்கள் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர்