உக்ரைனில் தேங்கி நிற்கும் 20 மில்லியன் டன் உணவு தானியம்: போர் நாடுகளுடன் துருக்கி பேச்சுவார்த்தை!


உணவு தானிய ஏற்றுமதி தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாட்டு தலைவர்களுடன் துருக்கி தற்போது மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்தநாட்டின் உயர்மட்ட அரசு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போரானது நான்காவது மாதத்தை தொடவிருக்கும் நிலையில், உக்ரைனின் அனைத்து ஏற்றுமதி துறைமுக வாயில்களையும் ரஷ்ய ராணுவம் சிறைப்பிடித்து வைத்துள்ளது.

ரஷ்ய ராணுவத்தின் இந்த சிறைப்பிடிப்பு நடவடிக்கையை அடுத்து உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள உணவு தானிய தட்டுபாட்டை நீக்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தரை மற்றும் நீரோடை (river)ஆகியவற்றின் முலம் தானியங்களை வெளியேற்ற வழிகளை உருவாக்கியது.

உக்ரைனில் தேங்கி நிற்கும் 20 மில்லியன் டன் உணவு தானியம்: போர் நாடுகளுடன் துருக்கி பேச்சுவார்த்தை! Reuters

இருப்பினும் இந்த குறுகிய உணவு தானிய போக்குவரத்தானது, போதுமான அளவிற்கு இல்லாததால் உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய 20 மில்லியன் டன் உணவு தானிய பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் உக்ரைனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுத் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்த கோரிக்கைக்கு, ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை நீக்கப்பட்டால் மட்டுமே உக்ரைன் துறைமுகங்கள் விடுவிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்ததுவிட்டது.

உக்ரைனில் தேங்கி நிற்கும் 20 மில்லியன் டன் உணவு தானியம்: போர் நாடுகளுடன் துருக்கி பேச்சுவார்த்தை!

இந்தநிலையில், உணவு தானிய ஏற்றுமதி தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டு தலைவர்களுடன் துருக்கி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக துருக்கியின் உயர்மட்ட அரசு அதிகாரி Reuters செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவல் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு; மொத்தமாக 8000 உக்ரைனிய வீரர்கள்…ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தலைவர் தெரிவித்த பகீர் தகவல்!

இந்த பேச்சுவார்த்தை ரகசியமாக இருப்பதால் துருக்கியின் உயர்மட்ட அதிகாரியின் பெயரை அவர்கள் வெளியிடவில்லை 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.