முன்பு மரியூபோல் நகரை ரஷ்யா பிடிக்கத் திட்டமிட்டபோது, அதைக் கடுமையாக எதிர்த்தனர் உக்ரைன் வீரர்கள்.
ஆனால், விடாமல் தாக்கி, பலரைப் படுகொலை செய்து, எஞ்சியிருந்தவர்களையும் மீட்பதுபோல் மீட்டு… இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை!
மரியூபோலை இப்போது பார்த்தால், சூறாவளி வந்து ருத்ரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்ற ஒரு ஊரைப்போல இருக்கிறது.
அதேபோல, சில நாட்களுக்கு முன், புடின் ஆதரவு ஊடகவியலாளர் ஒருவர், ரஷ்யாவுக்குச் சொந்தமான ஒரு அதிநவீனப் போர் வாகனத்தைக் குறித்து பெருமையடித்துக் கொண்டிருந்தார்.
டான்பாஸ் பகுதியிலுள்ள, Severodonetsk நகரில் நின்று வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், தவறுதலாக அந்த வாகனம் இருக்கும் இடத்தை உளறிக்கொட்டிவிட, அடுத்த 24 மணி நேரத்திற்குள் ட்ரோன் ஒன்றை அனுப்பி அந்த வாகனத்தை துவம்சம் செய்துவிட்டார்கள் உக்ரைன் வீரர்கள்.
ஆனால், விடயம் அத்துடன் முடிந்தது போலத் தெரியவில்லை…
காரணம், எந்த Severodonetsk நகரில் உக்ரைன் வீரர்கள் அந்த அதிநவீன ரஷ்யப் போர் வாகனத்தை சிதறடித்தார்களோ, அந்த நகரையே தற்போது துவம்சம் செய்து வருகிறார்கள் ரஷ்யப் படைவீரர்கள்!
மக்கள் அந்நகருக்குள் சிக்கியிருக்க, தொடர்ந்து Severodonetsk நகரம் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள் ரஷ்யப் படையினர்.
அந்நகரம் கடுமையான தாக்குதலைச் சந்தித்து வரும் நிலையில், அது அடுத்த மரியூபோல் ஆகிவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா மிச்சம் மீதி இருக்கும் தனது பலத்தை எல்லாம் திரட்டி, டான்பாஸ் பகுதி மீது தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
Severodonetsk நகரில் உள்ள எல்லாவற்றையும் அழித்துவிட ரஷ்யர்கள் விரும்புகிறார்கள் என எச்சரித்துள்ளார் அவர்.