உங்க கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் அசிங்கமாக இருக்கா? இதனை போக்க இதோ சில அசத்தலான டிப்ஸ்!


பொதுவாக பெண்களுக்கு கூடுதல் அழகு சேர்ப்பதில் மிக முக்கியமான பங்கு வகிப்பது அவர்களின் கண்கள் தான்.

ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு கண்ணுக்கு கீழே உண்டாகும் கருவளையம் பெரிய பிரச்சினையாக உள்ளது.

கண்ணுக்கு கீழே உண்டாகும் கருவளையம் உங்க கண்களின் அழகை கெடுத்து விடும்.

இது உங்க கண்களை மிக சோர்வாக காட்டும். கண்கள் சோர்வாக தெரியும் போது உங்க முகழகும் கெடுகிறது. எனவே கருவளையத்தை போக்க முயற்சிப்பது மிகவும் அவசியம்.

அந்தவகையில் தற்போது இதனை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்பதை பார்ப்போம். 

உங்க கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் அசிங்கமாக இருக்கா? இதனை போக்க இதோ சில அசத்தலான டிப்ஸ்!

  • குளிர்ந்த நீரில் நனைத்த துணியையும் கண்களுக்கு கீழே வைக்கலாம். இரண்டுமே ஒரே பலனைத் தரும். ஐஸ் கட்டிகளை கண்களுக்கு கீழே வைப்பது கண்களுக்கு கீழ் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் கருவளையங்களை நீக்க உதவும்.
  • இரண்டு ப்ளாக் அல்லது க்ரீன் டீ பேக்குகளை சுடுநீரில் ஊற வைக்க வேண்டும். பின் அதை ஃப்ரிட்ஜில் 20 நிமிடம் வைக்க வேண்டும். * அதன் பின் அந்த டீ பேக்கை எடுத்து கண்களின் மேல் 10-15 நிமிடம் வைத்து, பின் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவ வேண்டும்.
  • வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுத்து, பின் அதை கண்களின் மேல் 15-20 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இதனால் வெள்ளரிக்காயில் உள்ள உட்பொருட்கள், கண் வீக்கம் மற்றும் கருவளையங்களைப் போக்கும்.
  • ஒரு உருளைக்கிழங்கை எடுத்து துருவி சாறு எடுத்து, அந்த சாற்றினை பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களின் மேல் 20 நிமிடம் வைத்து எடுத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
  • கற்றாழையின் ஜெல்லை கண்களைச் சுற்றி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.
  • பாதாம் எண்ணெயை இரவு தூங்கும் முன் கண்களைச் சுற்றி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையங்கள் மறைந்து கண்கள் பளிச்சென்று இருக்கும்.
     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.