எம்.பி.சி பிரிவில் உள் ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க தடை கோரி ஐகோர்ட்டில் மனு

Pleas filed against TN backward class commission deciding MBC internal reservation: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இடஒதுக்கீட்டிற்குள் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து எந்த முடிவையும் எடுப்பதைத் தடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் உள்ள பழங்குடியினர் நலச் சங்கத் தலைவர் எம்.ஜெபமணி, தூத்துக்குடி மாவட்ட தமிழ்மீனவர் கூட்டமைப்பு ஏ.பிரேசில் ஆகியோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த முடிவை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எடுப்பதை தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

ஜாதி வாரியாகத் தரவு சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதுவரை தனது அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் உள் இட ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்க முடியும் என்றும் மனுதாரர்கள் சுட்டிக் காட்டினர். மேலும், MBC பிரிவுக்குள் உள் இடஒதுக்கீடு என்பது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துடன் (என்சிபிசி) கலந்தாலோசித்து மட்டுமே எடுக்கப்படும் ஒரு முக்கிய கொள்கை முடிவு என்று உச்ச நீதிமன்றம் சமீபத்திய தீர்ப்பில் கூறியுள்ளது என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதையும் படியுங்கள்: 134 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு; உடனடியாக மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

ஆனால் மேற்கூறிய அம்சங்கள் இருந்தபோதிலும், ஜூலை 2020 இல் மாநில அரசு இயற்றிய அரசாணையின் அடிப்படையில் MBC பிரிவுக்குள் உள் இடஒதுக்கீடு குறித்து ஆலோசிக்க மே 31 அன்று அதன் உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மே 20, 2022 அன்று ஒரு தகவல் அனுப்பியுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.  அரசாணையின் படி, MBC இடஒதுக்கீட்டிற்குள் உள் இடஒதுக்கீடு கோரி பல்வேறு சமூகங்கள் முன்வைத்த கோரிக்கைகள் மீது பரிந்துரை செய்வது, ஆணையத்தின் குறிப்பு விதிமுறைகளில் ஒன்றாகும் என்றும் மனுதாரர்கள் கூறினார். இது 68 DNT சமூகங்கள் உட்பட 115 சமூகங்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் என்று கூறிய மனுதாரர்கள், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மேற்கூறிய குறிப்பு விதிமுறைகளின்படி செயல்படுவதைத் தடுக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர். இந்த மனுக்கள் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.