கடலூர் மாவட்டத்தில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள கார்மாங்குடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரும், குறிஞ்சிப்பாடியில் சேர்ந்த இளம்பெண்ணும் பழகி வந்துள்ளனர்.
ஸ்ரீதர் திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண்ணிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்தப் பெண் மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் அப்பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என கூறி வெள்ளாற்றாங்கரை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு ஸ்ரீதர் மறைத்து வைத்திருந்த சுத்தியல் மற்றும் கற்களால் தாக்கியுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த விவசாயி ஒருவரை கண்டதும் ஸ்ரீதர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீதரை போலீசார் கைது செய்துள்ளனர்.