கார், பைக் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை.. ஜூன் 1 முதல் முக்கிய மாற்றம்..!

மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்த 3ஆம் தரப்பு மோட்டார் இன்சூரன்ஸ் ப்ரிமியம் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

இந்தக் கட்டணங்கள் கடைசியாக 2019-20 நிதியாண்டில் திருத்தப்பட்டன, ஆனால் கொரோனா தொற்று நோயின் காரணமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கார்-களுக்கான ப்ரீமியம்

கார்-களுக்கான ப்ரீமியம்

சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு படி 1000 சிசி-க்கு மிகாமல் இருக்கும் தனியார் கார்களுக்கான மூன்றாம் தரப்பு காப்பீட்டின் ஆண்டு ப்ரீமியம் 2019-20ல் ரூ. 2,072 லிருந்து ரூ.2,094 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டணங்களின் கீழ், 1000 சிசி முதல் 1500 சிசி வரையிலான இன்ஜின் திறன் கொண்ட தனியார் கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு ப்ரீமியம் 2019-20ல் ரூ.3,221ல் இருந்து ரூ.3,416 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

1500 சிசி-க்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட பெரிய தனியார் வாகனங்களின் ப்ரீமியம் ரூ.7,897ல் இருந்து ரூ.7,890 ஆக குறைய உள்ளது.

 

புதிய கார்கள்

புதிய கார்கள்

இதேபோல் 1000 சிசி-க்கு மிகாமல் இருக்கும் புதிய காருக்கு மூன்றாண்டுக்கான சிங்கிள் ப்ரீமியம் ரூ.6,521 ஆகவும், 1000 சிசி முதல் 1500 சிசி வரையிலான காருக்கு ரூ.10,640 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்ட கட்டணங்களின் கீழ் 1500 சிசி-க்கு மேற்பட்ட புதிய கார்களுக்கான மூன்று ஆண்டுகளுக்குக் காப்பீடு தொகை ரூ.24,596க்கு ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 

பைக்
 

பைக்

150 சிசி-க்கு மேல் ஆனால் 350 சிசி-க்கு மிகாமல் இருக்கும் இரு சக்கர வாகனங்களுக்குக் காப்பீட்டு ப்ரீமியம் ரூ. 1,366 ஆகவும், 350 சிசி-க்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கான ஆண்டு ப்ரீமியம் ரூ.2,804 ஆக விதிக்கப்படும்.

புதிய பைக்

புதிய பைக்

75 சிசி-க்கு மிகாமல் இருக்கும் இரு சக்கர வாகனங்களுக்கு ஐந்தாண்டு ஒற்றை ப்ரீமியம் ரூ. 2,901, 75 சிசி-க்கு மேல் ஆனால் 150 சிசி கீழ் இருக்கும் வாகனங்களுக்கு ரூ.3,851.

150 சிசி-க்கு மேல் ஆனால் 350 சிசி கீழ் இருக்கும் வாகனங்களுக்கு ரூ.7,365. இதோடு 350 சிசி-க்கு மேல் உள்ள இரு சக்கர வாகனம் ஐந்தாண்டுகளுக்கு ரூ.15,117 ஆகப் புதிய காப்பீடு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 

எலக்ட்ரிக் கார்கள்

எலக்ட்ரிக் கார்கள்

ஒரு தனிநபர் புதிதாக வாங்கும் எலக்ட்ரிக் கார்களின் சக்தி 30 KW க்கு குறைவாக இருந்தால், மூன்று ஆண்டுகளுக்கான காப்பீட்டு அளவு 5,543 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதேபோல் 30 KW-க்கு மேல் மற்றும் 65 KW-க்குக் கீழ் இருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மூன்று வருட ப்ரீமியம் ரூ 9,044 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

மேலும் 65 KW-க்கும் அதிகமான திறன் கொண்ட பெரிய எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மூன்று ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை 20,907 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Car, bike, Electric car third-party motor insurance premiums increased from june 1, 2022

Car, bike, Electric car third-party motor insurance premiums increased from june 1, 2022 கார், பைக் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை.. ஜூன் 1 முதல் முக்கிய மாற்றம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.