கிருஷ்ணகிரியில் தண்ணீர் தொட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
கிருஷ்ணகிரி அருகே பிஜிபுதூரை சேர்ந்த முனியப்பன் மகன் விக்னேஷ் வயது 14. இச்சிறுவன் மோகன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றிலிருந்து பாசனத்திற்கு நீர் பாய்ந்து கொண்டு இருக்கும்போது தண்ணீர் தொட்டியில் இறங்கி குளித்துள்ளான்.
அப்போது அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து தண்ணீர் தொட்டியில் விழுந்து உள்ளது. இதனால் மின்சாரம் பாய்ந்து விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.