குடும்ப அடிப்படையிலான அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி- பிரதமர் மோடி

ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளியின் (ஐஎஸ்பி) 20 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார்.

இதற்கு முன்னதாக ஐதராபாத்தில் நடைபெற்ற பேரணியின்போது பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தெலுங்கானாவில் குடும்ப கட்சிகள், தங்கள் வளர்ச்சியை மட்டுமே நினைக்கின்றனர். ஏழை மக்களைப் பற்றி கவலைப்படாத இந்தக் கட்சிகள், ஒரே குடும்பம் எப்படி ஆட்சியில் இருக்க முடியுமோ, அவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதில்தான் அவர்களின் அரசியல் உள்ளது. மக்களின் வளர்ச்சியில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை.

குடும்ப அடிப்படையிலான அரசியல் என்பது அரசியல் ரீதியான பிரச்சினை மட்டுமல்ல. ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி. ஒரு குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகமாக ஊழல் எப்படி மாறுகிறது என்பதை நம் நாடு பார்த்திருக்கிறது. தெலுங்கானாவிலும் பாஜகவினர் அரசியல் ரீதியாக குறிவைக்கப்படுகிறார்கள்.

இந்த குடும்ப அடிப்படையிலான கட்சிகள் திருப்திப்படுத்தும் அரசியலிலும், தங்கள் சொந்த வங்கிக் கணக்குகளை நிரப்புவதிலும் மும்முரமாக உள்ளன. அதே நேரத்தில் பாஜக தெலுங்கானாவை தொழில்நுட்ப மையமாக மாற்ற விரும்புகிறது.

எனக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நம்பிக்கை உள்ளது. மூடநம்பிக்கையில் நம்பிக்கை இல்லாத துறவியான யோகி ஆதித்யநாத்தையும் வாழ்த்துகிறேன். இதுபோன்ற மூடநம்பிக்கையாளிரிடம் இருந்து தெலுங்கானாவை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்- முழு விவரம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.