சென்னையில் இன்று நடைபெற இருக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தார். பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளம் சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கு செல்கிறார். அங்கு பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பாஜகவினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பிரதமர் பயணித்த வழியெங்கும் பாஜக கொடிகளோடு தாரை தப்பட்டை முழங்க பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், பரத நாட்டியம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலமும் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்..
உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தை இந்தியாவில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்