‘தமிழ் சினிமா வியாபாரத்தில் சீராகச் செல்லும் பொழுது உலகத்தர படத்தை விரும்புபவர்கள் கோபப்படுவார்கள்’ என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
‘விக்ரம்’ திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய கமல்ஹாசனிடம் ‘விக்ரம்’ படத்தின் வியாபாரம் இதுவரை இல்லாத அளவிற்கு நடைபெறறுள்ளது என கூறினீர்கள். தமிழ் சினிமா வளர்ச்சி சீரான பாதையில் செல்கிறதா என்ற கேள்வி ‘புதிய தலைமுறை’ சார்பில் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், வியாபாரத்தில் சீரான பாதையில் செல்லும் பொழுது உலகத்தர படங்களை எதிர்பார்ப்பவர்கள் கோபப்படுவார்கள். வியாபாரம் பண்ணி விட்டால் போதுமா? எங்களால் ஒன்றரை லட்சத்தில் படத்தை எடுத்து காட்ட முடியும். அதற்கு போட்டியாக இந்த ராட்சஸர்கள் என கேலி செய்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் இரண்டும் சேர்ந்ததே சினிமா என தெரிவித்தார்.
அதேபோல் நல்ல சினிமாவிற்கும், வியாபார வெற்றிக்கும் பாலம் அமைக்க 40 ஆண்டுகளாக தொடர்ந்து வேலை செய்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறேன் என கமல் குறிப்பிட்டார். மேலும் விக்ரம் படத்தின் வியாபாரம் அதன் உச்சம் என்று கருதுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்: கருணாநிதி பிறந்த நாளில் ‘விக்ரம்’ ரிலீஸ் ஏன்? – கமல்ஹாசன் பதில்