இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, கொழும்பில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இதையடுத்து அந்த நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். இருப்பினும் பொருளாதார நெருக்கடியினால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்கள் இன்னும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையின் ராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஜீன் 31-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்படவிருக்கும் விகம் லியனகே ஜூலை 1-ம் தேதி பொறுப்பேற்றார் எனக் கூறப்படுகிறது.
சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 23-வது தளபதியாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.