இலங்கையில் வங்கித்தொழில் துறைக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பல ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிவிசேட திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பொருளாதார நிலைமைகள் மற்றும் வங்கித்தொழில் துறையின் மீதான அதன் தாக்கத்தை கருத்திற்கொண்டு, வங்கித்தொழில் துறையின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வினைத்திறன் மிக்க நிதியியல் இடையீட்டையும் மற்றும் பொருளாதாரத்திற்கு கடன் வழங்குவதையும் வசதிப்படுத்துவதற்காக வங்கித்தொழில் துறைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.