நாட்டை மொத்தமாக உலுக்கிய சம்பவம்… மகப்பேறு மருத்துவமனையில் கொத்தாக பலியான பச்சிளம் குழந்தைகள்


செனகல் தலைநகர் டகார் அருகே மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

டகார் நகருக்கு கிழக்கே Tivaouane பகுதியில் அமைந்துள்ள மகப்பேறு மருத்துவமனை ஒன்றிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
குறைந்த மின்னழுத்தம் கரணமாகவே இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக செனகல் அரசியல்வாதி டியோப் சை தெரிவித்துள்ளார்.

மேலும், நெருப்பு வேகமாக பரவியதல், மீட்பு நடவடிக்கையில் தோய்வு ஏற்பட்டதாகவும், இருப்பினும் மூன்று குழந்தைகளை காப்பாற்ற முடிந்தது என்றார்.

நாட்டை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... மகப்பேறு மருத்துவமனையில் கொத்தாக பலியான பச்சிளம் குழந்தைகள்

குறித்த மருத்துவமனையானது சமீபத்தில் தான் செயல்பாட்டுக்கு வந்தது. இதனிடையே, ஏற்பட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் மிகவும் வேதனையானது என தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர்.

விபத்து தொடர்பில் அறிந்து மிகவும் வேதனையுற்றேன் என குறிப்பிட்டுள்ள நாட்டின் ஜனாதிபதி, அவர்களின் தாய்மார்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... மகப்பேறு மருத்துவமனையில் கொத்தாக பலியான பச்சிளம் குழந்தைகள்

செனகல் நாட்டில் பொது சுகாதார மையங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவது இது முதன்முறையல்ல.
ஏப்ரல் பிற்பகுதியில் வடக்கு நகரமான Linguere-ல், மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு நான்கு பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

அந்த சம்பவமும் குறைந்த மின்னழுத்தம் என்றே விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும், சமீபத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்த சம்பவத்திற்கு நாடே இரங்கல் தெரிவித்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 மணி நேரத்திற்கு பின்னர் அவர் பரிதாபமாக மரணமடைந்தார். குறித்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.