ஜப்பானைச் சேர்ந்த ‘ஜெப்பெட்’ என்பவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆடை வடிவமைப்பாளராகவும், தத்ரூபமான கதாபாத்திரங்களை உருவாக்கும் சிலை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். நாய்கள்மீது அதித ப்ரியம் கொண்ட இவருக்கு நாயையைப்போல ஒருநாளாவது வாழ வேண்டும் என்று ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ளத் திட்டமிட்ட இவர், தனக்குப் பிடித்த கோலி (collie) வகையைச் சேர்ந்த நாய்போல வேடம் தரித்துக் கொண்டார். பார்ப்பதற்கு அச்சு அசலாக நாயைப்போலவே இருக்கும் இந்த தத்ரூபமான வடிவமைப்பைச் செய்து முடிக்க 40 நாட்கள் ஆனதாகவும் இதற்கு 12 லட்சம் செலவானதகவும் கூறப்படுகிறது.
【制作事例 追加】
犬 造型スーツ個人の方からのご依頼で、犬の造型スーツを制作しました。
コリー犬をモデルにしており、本物の犬と同様に四足歩行のリアルな犬の姿を再現しております詳細はこちら:https://t.co/0gPoaSb6yn#犬 #Dog #着ぐるみ#特殊造型 #特殊造形 pic.twitter.com/p9072G2846
— 特殊造型ゼペット (@zeppetJP) April 11, 2022
அச்சு அசலாக நாயைப்போலவே இருக்கும் அவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்ட ஜெப்பெட், “எனக்குப் பிடித்ததாகவும் வடிவமைக்க சரியாக இருக்கும் என்பதாலும் இந்த கோலி (collie) வகையைச் சேர்ந்த நாயையை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். குறிப்பாக இந்த நாயின் கால்கள் எனக்கு பிடிக்கும். அது மிகவும் அழகாக இருக்கும்” என்றார். மேலும் நகைச்சுவையாக “இந்த வகையான நாய்களில் நான்தான் மிகவும் பெரிய உயரமான நாய்” என்று கூறினார். இவரின் திறமையைப் பாராட்டி பலரும் இந்தப் புகைப்படத்தை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.