பிரதமர் மோடியின் கார் குறுக்கே ஓடிவர முயன்ற தொண்டர்கள்.! 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.

இதற்காக தனி விமானம் மூலம் ஐதராபாத்தில் நகரில் இருந்து பிரதமர் மோடி சென்னை வந்தார். பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளம் சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கு வந்தடைந்தார். தற்போது பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார்.

முன்னதாக, பிரதமர் மோடிக்கு பாஜகவினர், பொதுமக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பிரதமர் பயணித்த வழியெங்கும் பாஜக கொடிகளோடு தாரை தப்பட்டை முழங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமரின் வாகனம் வந்து கொண்டிருந்தபோது, கூடியிருந்த பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடியை நோக்கி கையசைத்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து, அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க, பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். பிரதமர் நரேந்திர மோடியும் சிறிது தூரம் காரின் கதவை திறந்து கையசைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். 

பின்னர் அவரின் வாகனம் வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் நின்றிருந்த தொண்டர்கள் சாலையின் நடுவே உற்சாக மிகுதியில் வந்தனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் காரை நோக்கி அவர்கள் குறுக்கே வர முயன்றனர்.

அப்போது பிரதமரின் பாதுகாவலர்களும், போலீசாரும் தக்க சமயத்தில் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதேபோல் இரண்டு இடங்களில் தொண்டர்கள் உற்சாக மிகுதியில் பிரதமர் மோடியின் காருக்கு குறுக்கே வர முயன்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.