விளாடிமிர் புடினுடன் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகப் பேசத் தயாராக இருப்பதாக உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைன் தனது அனைத்துப் பகுதிகளையும் மீட்கும் வரை போராடும்.
ரஷ்ய ஜனாதிபதி உண்மையைப் புரிந்து கொண்டால், மோதலை முடிவுக்கு கொண்டு வர தூதரக வழியைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
இது 3ம் உலகப் போரின் தொடக்கமாக இருக்கலாம்! பிரபல கேடீஸ்வரர் எச்சரிக்கை
இது பேச்சுவார்த்தைக்கான முதல் படியாக இருக்கலாம் என கூறிய ஜெலன்ஸ்கி, உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா நீண்ட நாட்களாக விளையாடி வருகிறது என குறிப்பிட்டார்.
ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று உக்ரேனிய ஜனாதிபதி கூறினார்.