அடிக்கடி ஜேர்மனிக்குச் செல்லும் புடினுடைய மகள், தனது இரத்தத்தை வெளியே எடுத்து, அதில் மாற்றங்கள் செய்யப்பட்ட பின், மீண்டும் தனது தோலுக்கடியில் அதை செலுத்திக்கொள்ளும் ஒரு விலையுயர்ந்த சிகிச்சையை செய்துகொள்வதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
புடினுக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த மகளான கேத்ரினா (Katerina Tikhonova, 35), ‘vampire facelift’ என்னும் அழகை அதிகரிக்கும் சிகிச்சையை செய்து வருவதாக Bild பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
’அப்பா, உக்ரைனில் அப்பாவி மக்களின் இரத்தத்தை சிந்தி வருகிறார், மகள் vampire சிகிச்சை செய்துகொள்கிறார். பரவாயில்லை, அப்பாவைப்போலவே மகள்’ என சமூக ஊடகம் ஒன்று கேத்ரினாவை விமர்சித்துள்ளது.
கேத்ரினாவின் அப்பா புடின், தனது உடலில் இருந்து வெளியேறும் மரபியல் உயிரியல் பொருட்கள் எதையாவது யாராவது எடுத்து ஏதாவது செய்துவிடுவார்கள் என பயந்து, தான் எங்கு சென்றாலும் தன்னுடன் ஒரு டாய்லெட்டைத் தூக்கிக்கொண்டே அலைகிறார். விளையாட்டுப் பிள்ளையான அவரது மகளோ, விலைமதிப்பில்லாத மரபியல் உயிரியல் பொருட்களை ஊதாரித்தனமாக வீணாக்கிக்கொண்டிருக்கிறார் என அந்த ஊடகம் கேலி செய்துள்ளது.
ஆனாலும், நேட்டோ புடினுடைய மரபியல் உயிரியல் பொருட்கள் மற்றும் DNA ஆகியவற்றை ஏற்கனவே சேகரித்துவிட்டது. அதை வைத்து அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால், பயமாக இருக்கிறது என்றும், சொல்லப்போனால், நேட்டோ அமைப்பினர் புடினுடைய மரபியல் உயிரியல் பொருட்களை ஏற்கனவே ஆய்வுக்குட்படுத்தியிருப்பார்கள் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
உடலிலிருந்து இரத்தத்தை சேகரித்து செய்யப்படும் அந்த அழகூட்டும் சிகிச்சைக்காக, கேத்ரினா, ஒரு முறைக்கு 4,310 யூரோக்கள் செலவிடுவதாக Bild பத்திரிகை தெரிவித்துள்ளது.
புடினுக்கும் அழகூட்டும் சிகிச்சை மீது ஆர்வம் உண்டு.
ஆக, அவரது மகளும் தனது நெற்றி, மற்றும் சிரிக்கும்போது முகத்தில் ஏற்படும் வரிகளை அகற்றுவதற்காக அழகியல் சிகிச்சை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் மக்கள் அது குறித்து விமர்சித்து வருகிறார்கள்.
ஒருவர், அப்பாவைப் போல பிள்ளை என்று கூற, மற்றொருவரோ, கேத்ரினா ஒரு விசித்திரமான அழகியல் சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான யூரோக்களை வீணடித்துள்ளார் என்று கூறியுள்ளதுடன், அப்பாவைப்போலவே மகளும் இளமையுடன் நீண்ட காலம் வாழ மகளும் விரும்புகிறாரோ என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.