புதுடில்லி: தனக்கு கொலை மிரட்டல் வருவதாக சுயேட்சை பெண் எம்.பி., ராணா நவ்நீத் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டுக்கு வெளியே, ‘அனுமன் சாலிசா’ எனப்படும் துதி பாட முயன்ற சம்பவத்தில் சுயேச்சை பெண் எம்.பி., ராணா நவ்நீத் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,வான அவரது கண வரும் ஏப்.23-ம் தேதியன்று கைதாகினர். அவர்கள் மீதும், மும்பை கார் போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருவரையும், 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்ட்டது.
தங்களுக்கு ஜாமின் வழங்கிட கோரி மும்பை செஷஷன்ஸ் கோர்ட்டில் ராணா நவ்நீத் தம்பதியினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி நிபந்தனை ஜாமின் வழங்கினார். இருவரும் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.
இந்நிலையில் தனது உதவியாளர் மூலம் டில்லி வடக்கு அவென்யூ காவல்நிலையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் கடந்த செவ்வாய் மாலை 5.27 மணி முதல் 5. 37 மணி வரை எனது தனிப்பட்ட மொபைல் போன் வாயிலாக எனக்கும், எனக்கும், எனது கணவருக்கும், 20 முறைக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இவ்வாறு அந்த புகாரில் நவநீத் ராணா கூறியுள்ளார்.
Advertisement