ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் மனிதர்கள் கைவிரல்களை போல செயல்படும் ரோபோ விரலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
6-வது விரலாக கைளில் பொறுத்தப்பட்டுள்ள ரோபோ விரல், மற்ற விரல்களை போல பணிகளை செய்கிறது. தசைகளில் இருந்து வரும் மின் சமிக்ஞைகள் கையில் பொறுத்தப்பட்டுள்ள நான்கு சென்சார் மூலம் அளவிடப்பட்டு ஆறாவது ரோபோ விரல் இயங்குகிறது.
ஜப்பானின் எலக்ட்ரோ-கம்யூனிகேஷன்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கான பிரெஞ்சு தேசிய மையம் இணைந்து இதனை உருவாக்கியுள்ளது.