மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள்: வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து ரூ.19.52 லட்சம் அபராதம் வசூல்!

சென்னை: விதிகளுக்கு புறம்பாக, மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள்  கொடுத்தது தொடர்பாக, வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி  ரூ.19.52 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.  மேலும்,  2983 இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், வீட்டு உரிமை யாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சிக்க  உட்பட்ட 15 மண்டலங்களில் 3799 கழிவுநீர் இணைப்புகள் மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டு இருந்ததை மாநகராட்சி கண்டறிந்துள்ளது. இதனையடுத்து, மாநகராட்சி உதவி / இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர், கழிவுநீர் அகற்றல் வாரிய உதவி பொறியாளர் கொண்ட குழு சென்னை மாநகராட்சி முழுவதும் விதிகளுக்கு புறம்பாக இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்கள் குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் விதிகளுக்கு புறம்பாக சென்னை மாநகரட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2983 இணைப்புகள் உள்ளது கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டலமான 6முதல் 10வரை 1628 சட்டத்திற்குப் புறம்பான முறையற்ற கழிவுநீர் இணைப்பு கள் உள்ளது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து விதிகளுக்கு புறம்பாக மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டிருந்த, கழிவுநீர் இணைப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2983 இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளதோடு, 19.52லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.