முதலீடு Vs இன்சூரன்ஸ்: இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

லைப் இன்சூரன்ஸ் என்பது தற்போது இந்தியாவில் உள்ள அனைவருமே பயன்படுத்தும் முக்கிய திட்டமாக மாறிவிட்டது. நமக்கு பின் நமது குடும்பம் எந்தவித சிரமமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக போடப்படுவது தான் லைப் இன்சூரன்ஸ்.

ஆனால் லைப் இன்சூரன்ஸ் உடன் இன்வெஸ்ட்மெண்ட்டை இணைக்கலாமா? லைப் இன்சூரன்ஸ் கலந்த இன்வெஸ்ட்மெண்ட் புத்திசாலித்தனமானதா? என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கும். அந்த குழப்பத்தையும் குழப்பத்தின் தீர்வையும் பார்க்கலாம்.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

நம்மிடம் இருக்கும் சொத்து மதிப்பு மற்றும் நமக்கு இருக்கும் கடன் ஆகியவற்றை கழித்து பார்த்தால் நம்மிடம் இருக்கும் நிகர சொத்து மதிப்பு நமக்கு தெரியவரும். இந்த சொத்து மதிப்பு நமது சந்ததியினருக்கு போதுமானது என்றால் நீங்கள் லைப் இன்சூரன்ஸ் போட வேண்டிய அவசியமில்லை.

 லைப் இன்சூரன்ஸ் திட்டம்

லைப் இன்சூரன்ஸ் திட்டம்

ஆனால் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும் குடும்பத்தில் உள்ள தலைவர் திடீரென மறைந்து விட்டால் அவரது குடும்பத்தினர் தத்தளிப்பதை தவிர்ப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது தான் லைப் இன்சூரன்ஸ் திட்டம்.

லைப் இன்சூரன்ஸ் vs இன்வெஸ்ட்மெண்ட்

லைப் இன்சூரன்ஸ் vs இன்வெஸ்ட்மெண்ட்

இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் பலர் மணிபேக் உள்பட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர் என்பதும் இன்ஷூரன்ஸ் என்பதை இன்வெஸ்ட்மென்ட் என்று சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்றும் பொருளாதார ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.

 இரண்டும் வேறு வேறு
 

இரண்டும் வேறு வேறு

லைப் இன்சூரன்ஸ் என்பது வேறு, இன்வெஸ்ட்மெண்ட் என்பது வேறு என்பதை முதலிலேயே பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இன்ஷூரன்ஸ் என்பது முழுக்க முழுக்க நமக்கு பின் நமது குடும்பத்திற்கு சேர வேண்டிய தொகை. அந்த தொகை நாம் இருக்கும் போதே வரும் வகையில் இன்வெஸ்ட்மெண்ட் செய்வதால் அதில் எந்த லாபமும் இருக்காது.

டேர்ம் இன்சூரன்ஸ்

டேர்ம் இன்சூரன்ஸ்

எனவே டேர்ம் இன்சூரன்ஸ் போன்ற முழுக்க முழுக்க இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட பாலிசியை மட்டுமே எடுத்தால் மட்டுமே நமக்கு பின் நமது குடும்பத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இன்ஷூரன்ஸில் இன்வெஸ்ட்மெண்ட் செய்வது என்பது தவறான முடிவு என்று கூறப்படுகிறது.

பொருளாதார ஆலோசனை

பொருளாதார ஆலோசனை

எனவே இன்வெஸ்ட்மெண்ட் செய்பவர்கள் மியூட்சுவல் பண்ட், ஸ்டாக் மார்க்கெட், தங்கம் உள்ளிட்டவைகளில் முதலீடு செய்யலாம். இன்சூரன்ஸ்க்கு என தனியாக ஒரு தொகையை ஒதுக்கி விட்டு அந்த தொகையை மறந்துவிட வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டு இரண்டையும் ஒன்றாக கலந்து குழப்பி கொள்ளக்கூடாது என்பதுதான் பெரும்பாலான பொருளாதார ஆலோசகர்களின் முக்கிய ஆலோசனையாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What is the difference between Life insurance and investment?

What is the difference between insurance and investment? | இன்வெஸ்ட்மெண்ட் செய்ய இன்சூரன்ஸ் போடலாமா? இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

Story first published: Wednesday, May 25, 2022, 15:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.