ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையையும் குணநலனையும் கூறுகிறார்கள் என்பதால் பார்ப்பவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதியாகவும் தெரியக்கூடியவை. அதே நேரத்தில் இந்த படங்கள் முதல் பார்வையில் தெரிவதை வைத்து ஆளுமையையும் குறிப்பிடலாம்.
சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ ஆளுமையைக் குறிப்பிடுவதாக உள்ளது. ஒருவர் எவ்வளவு புத்திசாலியாகவும் கவனிக்கக்கூடியவராகவும் இருக்கிறார் என்பதை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் குறிப்பிடுகிறது. சில சமயங்களில், நீங்கள் இந்தப்படத்தில் முக்கியமானவற்றைப் பார்ப்பீர்கள், ஆனால், அளவில் சிறியதாகவோ அல்லது படத்தில் எங்காவது மறைந்திருக்கும் பொருட்களை பார்க்கமாட்டீர்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்தக்கூடியவை. அது நீங்கள் முதல்ல என்ன பார்க்கிறீர்களோ அதைப் பொறுத்து இருக்கும். யுவர்டாங்கோ என்பவர் தனது சமூக ஊடக பக்கத்தில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஒருவர் முதலில் என்ன பார்க்கிறார் என்பதை வைத்து, அவர்களின் காதல் மற்றும் உறவைப் பற்றிய மனநிலையைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். சிலர் தனியாக இருக்க விரும்பலாம். மேலும் சிலர் தனிமையாக உணரலாம். ஏனெனில், அவர்களுக்கு காதலில் விருப்பம் இல்லை. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
நீங்கள் முதலில் நிலாவைப் பார்த்தால், நீங்கள் எப்பொழுதும் தனிமையாக உணர்கிறீர்கள். இவர்கள் யாருடனும் மிகவும் சுதந்திரமாக இருப்பது வசதியாக இல்லை என்பதே இதற்குக் காரணம். மற்றவர்களை நம்புவது உங்களுக்கு ஒரு பயங்கரமான மற்றும் பயமுறுத்தும் உணர்வாக இருக்கும். ஆனால், உங்கள் பயத்தை நீங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் விரும்பும் உறவுகளை உங்களால் உருவாக்க முடியாது. வெளிப்படையாக இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் வாழ்நாள் முழுவதும் நேசிக்கும் சில அழகான உறவுகளை உருவாக்கலாம்.
முதலில் திமிங்கிலத்தைப் பார்த்தால், அவர்கள் முழுமைவாதிகள். நீங்கள் விரும்பும் நபரின் பொறுப்பை ஏற்கத் தவறிவிடுவீர்கள், மேலும், உறவில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக ஓடிவிடுவீர்கள். எனவே, நீங்கள் உறவுகளிலிருந்து விலகி இருக்க விரும்பினாலும், நீங்கள் விரும்பாவிட்டாலும் தனிமையாக இருக்க விரும்புகிறீர்கள்.
தண்ணீரில் சர்ஃப் செய்பவரை முதலில் பார்த்தால், நீங்கள் தனிமையில் இருக்கலாம். உறவுகள் சமரசம் மற்றும் பயமுறுத்தும் என்று நீங்கள் நம்புகிறீர்கள், மேலும் அவற்றில் உங்களை நீங்கள் இழக்க நேரிடும் என்று கவலைப்படுகிறீர்கள். இந்த அச்சங்கள் உங்களை யாரோ ஒருவரிடம் அன்பு செய்வதிலிருந்தும், அவர்களுக்கு சிறப்பு உணர்வை ஏற்படுத்துவதிலிருந்தும் தடுக்கிறது. எனவே, நீங்கள் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதில் தோல்வியடைந்து தனியாக இருப்பீர்கள். என்ன உங்கள் பர்சனாலிட்டியை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“