முதல்வர் அலுவலகத்தில் வேலை.. உடனே விண்ணப்பிங்க..!!

 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ள பெல்லோஷிப் திட்டம், ஆளுமை மற்றும் சேவை வழங்கல் செயல்முறைகளை மேம்படுத்த இளம் தொழில் வல்லுநர்களின் திறமைகளைப் பயன்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்  (டிஎன்சிஎம்ஃப்பி) 2022-24-க்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

jobs

இன்று முதல் ஆன்லைன் வாயிலாக https://www.bim.edu/tncmpfஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஆன்லைன் விண்ணப்பத்தை வருகிற ஜூன் மாதம் 10-ம் தேதியுடன் விண்ணப்பிக்க கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை தவிர்த்து வேறு எந்த வகையிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் விண்ணப்பக் கட்டணம் என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

இந்த வேலை வாய்ப்பை பெற விண்ணப்பிப்பவர்கள், 22 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். தொழில்முறை படிப்புகளில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பு (பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவ அறிவியல்) அல்லது கலை, அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, தமிழ் வேலை அறிவு கட்டாயம்.

Money

கணினி அடிப்படையிலான செயல் முறை தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு   நடைபெறும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டும் இளைஞர்களுக்கு சென்னையில் பணி வழங்கப்படும்.  பணியில் அமர்த்தப்படுபவர்கள் மாவட்டங்களுக்கு அவ்வப்போது களப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு மாத சம்பளம் மற்றும் 65 ஆயிரம் மற்றும் உதவித்தொகையா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டதாரி இளைஞர்கள், முதல்வர் அலுவலகத்தில் பணியில் சேர அதிகளவில் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணி காலம் ; 2 ஆண்டுகள்
சம்பள விவரம் ; ரூ.65,000 + ரூ.10,000 (Additional Allowance)
தகுதி ; டிகிரி (தமிழ் தெரிந்திருக்க வேண்டும்)
தேர்வு செய்யப்படும் முறை; எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு
பணியிடம்; சென்னை
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25/05/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 10/06/2022

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.