மெட்ரோ ரயில்நிலையத்திற்கு தீ! இம்ரான் கான் பேரணியில் வெடித்த வன்முறை.. கலவரபூமியான பாகிஸ்தான் தலைநகர்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததால் பெரும் பரபரப்பானது.

ஷபாஸ் ஷெரீப் பிரதமரானதை ஏற்க மறுப்பதாக கூறி வரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறார்.

மேலும், தனது கட்சி ஆதரவாளர்களை திரட்டி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான், தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக நுழைந்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகரில் பேரணியை தடுக்க பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனாலும், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தடுப்புகளை மீறி செல்ல முற்பட்டனர்.

அப்போது அவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இஸ்லாமாபாத்தில் வன்முறை வெடித்தது.

வாகனங்கள், மரங்கள் தீயிற்கு இரையாகின. வன்முறை உச்சத்தை எட்டிய நிலையில், மெட்ரோ ரயில் நிலையம் தீ வைத்து ஏரிக்கப்பட்டது.

மெட்ரோ ரயில்நிலையத்திற்கு தீ! இம்ரான் கான் பேரணியில் வெடித்த வன்முறை.. கலவரபூமியான பாகிஸ்தான் தலைநகர்

Photo credit: AFP 

மெட்ரோ ரயில்நிலையத்திற்கு தீ! இம்ரான் கான் பேரணியில் வெடித்த வன்முறை.. கலவரபூமியான பாகிஸ்தான் தலைநகர்

ஊடக அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட பொலிஸார் வன்முறையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.

இதே போல் லாகூர், ராவல்பிண்டி, கராச்சி உள்ளிட்ட நகரங்களிலும் வன்முறை வெடித்ததில், இம்ரான்கானின் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்தனர். மேலும் பொலிஸார் பலரை கைது செய்தனர்.

மெட்ரோ ரயில்நிலையத்திற்கு தீ! இம்ரான் கான் பேரணியில் வெடித்த வன்முறை.. கலவரபூமியான பாகிஸ்தான் தலைநகர்

Photo credit: AFP/Getty

நிலைமையை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ராணுவத்தை அழைத்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதி, பிரதமர் குடியிருப்புகள் உட்பட அரசு நீதித்துறை மற்றும் சட்டமன்ற கட்டிடங்கள் அமைந்துள்ளன பகுதி சிவப்பு மண்டலம் என அழைக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில்நிலையத்திற்கு தீ! இம்ரான் கான் பேரணியில் வெடித்த வன்முறை.. கலவரபூமியான பாகிஸ்தான் தலைநகர்

Photo credit: Mohsin Raza/Reuters

சிவப்பு மண்டலத்தை மீற முயற்சிக்கும் எவரும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என இஸ்லாமாபாத் ஐ.ஜி அக்பர் நசீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவங்களால் பாகிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

மெட்ரோ ரயில்நிலையத்திற்கு தீ! இம்ரான் கான் பேரணியில் வெடித்த வன்முறை.. கலவரபூமியான பாகிஸ்தான் தலைநகர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.