'யாரோ விட்டுச்சென்ற அடையாளம்' – விமானத்திற்குள் குட்கா கறையைக் காட்டி ஐஏஎஸ் அதிகாரி ட்வீட்

புதுடெல்லி: விமானத்திற்குள் யாரோ ஒருவர் குட்கா மென்று துப்பிய கறையை பகிர்ந்துள்ளார் ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் ஷரன். அவரது ட்வீட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பேருந்து தொடங்கி விமானம் வரையில் ஜன்னலோர இருக்கையில் பெரும்பாலான மக்கள் பயணம் செய்ய விரும்புவார்கள். அந்த இருக்கையில் அமர்ந்து பயணிக்க விரும்பாதவர்கள் மிகவும் குறைவு. இருந்தாலும் சமயங்களில் அந்த ஜன்னல் ஒரே இருக்கை சுகாதாரமற்ற முறையில் இருக்கும். எச்சில் துப்புவது, பாக்கு – குட்கா போன்றவற்றை மென்று துப்புவது, பபுள் கம் துப்புவது என அந்த இருக்கையின் ஓரத்தில் சிலர் அசுத்தம் செய்வதுண்டு. அது மற்ற பயணிகளுக்கு அசவுகரியத்தை கொடுக்கலாம்.

மேற்கூறிய காட்சிகளை அப்படியே கண்முன்னே கொண்டு வரும் படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் ஷரன். அந்தப் படத்தில் யாரோ ஒருவர் விமானத்தின் ஜன்னல் ஓர இருக்கையில் குட்கா மென்று துப்பி சென்ற கறை இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். ‘எவரோ தன் அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார்’ என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். அது நெட்டிசன்கள் கண்களில் பட வைரலாகி உள்ளது.

அவரது இந்த பதிவு பல்லாயிரம் லைக்குகளை கடந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அதனை ரீ-ட்வீட் செய்துள்ளனர். “இதெல்லாம் அவர்களது வளர்ப்பின் வெளிப்பாடு”, “இது மாதிரியான செயல்களை மன்னிக்கக் கூடாது. அந்த நபர் யார் என்பதை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்” எனவும் பயனர்கள் சொல்லி உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.