ஜப்பான் நாட்டில், 12 லட்சம் ரூபாய் செலவு செய்து, ஒருவர் நாய் போல் மாறி உள்ளது, வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்க்கையில், மனிதனுக்கு பல ஆசைகள் இருக்கும். ஒருவருக்கு, ஐஏஎஸ் ஆக வேண்டும்; ஐபிஎஸ் ஆக வேண்டும்; முதலமைச்சர் ஆக வேண்டும்; பிரதமர் ஆக வேண்டும்; நடிகராக வேண்டும் என, இப்படி பல ஆசைகள் இருக்கும். ஆனால் கிழக்கு ஆசிய நாடான ஜப்பானைச் சேர்ந்த நபர் ஒருவர், மனிதனாக வாழ்ந்து போரடித்து விட்டு எனக் கூறி, நாய் போல் மாறி உள்ளார்.
டோகோ என்ற ட்விட்டர் பயனாளர் ஒருவர் தனது விசித்திர ஆசையை நிறைவேறி உள்ளார். அதாவது அவரின் வாழ்க்கையில் நன்றிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நாய் போன்று தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொள்ள விரும்பி உள்ளார்.
இதற்கு ஜெப்பெட் என்ற நிறுவனத்திடம் 12 லட்சம் ரூபாயில் அதற்கான உடையை வாங்க ஏற்பாடு செய்துள்ளார். கோலி இன நாயின் உருவத்தில் இருக்கும் அந்த உடையில் அவர் முழு உருவில் நாய் போன்று காட்சி தந்தார்.
நான்கு கால்களையும் முன்னும் பின்னும் ஆட்டி, சாய்வாக படுத்து, வாயை அசைத்து கிட்டத்தட்ட நாயை போன்று செயல்பட்டார்.
83 வயதில் ஆபாச பட நடிகர் – பாதிரியாரின் செக்ஸ் ஆக்டிங் அனுபவம்!
இந்த உடையை வடிவமைக்க 40 நாட்கள் ஆனதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.