பிரதமர் நரேந்திர மோடி உரை
தமிழ்நாடு சிறப்பு வாய்ந்த பூமி
வணக்கம் என தமிழில் கூறி தன் உரையை ஆரம்பித்தார் பிரதமர் நரேந்திர மோடி
தமிழ்நாடு சிறப்பான பூமி,.. மக்கள், கலாச்சாரம் என அனைத்துமே சிறப்பானவை
செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாரதியின் பாடலை மேற்கோள் காட்டி பாடினார் மோடி
செவித்திறன் குறைபாடு உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் பதக்கங்கள் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்
தமிழ்மொழி நிலையானது, தமிழ் கலாச்சாரம் மிகப்பெரியது.. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேஷியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை பரவியுள்ளது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கான்ஸ் திரைப்பட விழாவில் வேட்டி அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடைபோட்டது பெருமைக்குரியது
நாம் இங்கு இணைந்திருப்பது, தமிழ்நாட்டின் மற்றொரு வளர்ச்சித் திட்டப் பணிக்காக..
31 ஆயிரம் கோடி மேற்பட்ட திட்டங்கள் இங்கு தொடங்கப்படுகிறது அல்லது அடிக்கல் நாட்டப்படுகிறது
பெங்களுர் – சென்னை வழித்தடம், சென்னை துறைமுகம் – மதுரவாயல் என பொருளாதார வளமையோடு தொடர்புடைய திட்டங்கள்
தர்மபுரி நெரலூரு, சிதம்பரம் மீன்சுருட்டி திட்டங்கள் மற்றும் 5 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுவது மகிழ்ச்சி
மதுரை – தேனி ரயில் வழித்தடம் விவசாயிகளுக்கு அதிக பலனை தரக்கூடிய ஒன்றாகும்
சென்னை கலங்கரை விளக்கத்தில் பிரதமரின் அனைவருக்குமான வீடு திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், சாதனை நேரத்தில் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன
திருவள்ளுர் முதல் பெங்களுர் வரையும், எண்ணூர் முதல் செங்கல்பட்டு வரையிலான இயற்கை எரிவாயு திட்டத்தால் 4 மாநிலங்கள் பயன்பெறும்
நாட்டின் இதர பகுதிகளிலும் பன்முனை சரக்கு முனையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்
இதன்மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும், தற்சார்பு பாரதம் திட்டமும் நிறைவேறும்
நண்பர்களே, உங்கள் ஒவ்வொருவரின் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் வேண்டும் என்ற எண்ணம் உண்டு
குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு தேவை, தலைசிறந்த உள்கட்டமைப்பு
நமது அரசு உள்கட்டமைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது
வளரும் நாடுகள் என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடு என்ற நிலைக்கு உயர்ந்தன
எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அவை அனைத்தும் அனைவரையும் சென்று சேர்வதை நோக்கி நாம் பயணிக்கிறோம்
ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு என்பதை இலக்காக கொண்டு செயல்படுகிறோம்
இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புறக்கட்டமைப்புகளின் மேம்பாடு அவசியமானது
இன்று அதிவேக இணையதள வசதியை கொண்டு சேர்க்க பாடுபடுகிறோம்
இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்
செங்கோட்டையில் நான் ஆற்றிய உரையின் போது 100 லட்சம் கோடி மதிப்பீட்டில் கதி சக்தி திட்டம் பற்றி கூறினேன்