கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னரே பலர் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டு இருப்பார்கள்.
காலையில் தினந்தோறும் அரக்கபரக்க அலுவலகத்திற்கு சென்று மாலையில் மிகவும் சோர்வாக பஸ், ரயில் பிடித்து வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
ஆனால் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற வசதி ஏற்பட்டவுடன் வீட்டில் இருந்துகொண்டே செளகரியமாக வேலை பார்க்கும் சுகம் அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்பட்டு விட்டது.
30 மணி நேரத்திற்கு ஒரு கோடீஸ்வரரை உருவாக்கிய கொரோனா.. ஏழைகளின் நிலை?
வொர்க் ப்ரம் ஹோம்
தற்போது மீண்டும் அலுவலத்திற்கு வரச் சொன்னால் கூட தங்கள் வேலையை ராஜினமா செய்துவிட்டு வொர்க் ஃப்ரம் ஹோம் தரும் நிறுவனத்தில் சேர பலர் தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில் வொர்க் ஃப்ரம் ஹோம் பணி ஒருபுறம் வசதியாக இருந்தாலும் ஒருசில நகரங்களில் வொர்க் ஃப்ரம் ஹோம் பணியில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று கூறுபவர்களும் உண்டு.
கருத்துக்கணிப்பு
இந்த நிலையில் சமீபத்தில் மொபைல் தொழில்நுட்ப நிறுவனமான கீசி என்ற நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பின்படி வொர்க் ஃப்ரம் ஹோம் பணிக்கு சிறந்த 10 நகரங்கள் எவை? என்பது குறித்து கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. நகர வாழ்வாதாரம், தரமான சுகாதாரம், வாழ்க்கைச் செலவு மற்றும் போதுமான ஓய்வு ஆகியவைகளை கணக்கில் கொண்டு இந்தப் பட்டியல் கணக்கிடப்பட்டுள்ளது.
சுகமான அனுபவம்
தொலைதூரம் சென்று பணி செய்பவர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் மிகவும் சுகமாக அனுபவமாக இருப்பதால் இந்த அனுபவத்தில் இருந்து வெளியே வர அவர்கள் தயாராக இல்லை என்றும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அலுவலகம் சென்று பணி செய்வது தான் முழு திருப்தியை தருகிறது என்று கூறும் மக்களும் உள்ளனர்.
செலவு மிச்சம்
மேலும் அலுவலகத்தின் வாடகை, பராமரிப்புச் செலவு, மின்சார செலவு, இன்டர்நெட் செலவு உள்ளிட்ட அனைத்துமே நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் பணியால் மிச்சம் ஆகிறது என்றும் இதனால் ஒருபுறம் நிறுவனங்களின் உரிமையாளர்களே வொர்க் ஃப்ரம் ஹோம் பணியை ஆதரித்து வரும் நிலையும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சிறந்த 10 நகரங்கள்
இந்த நிலையில் வொர்க் ஃப்ரம் ஹோம் பணிக்கு சிறந்த 10 நகரங்கள் எவை? என்பது குறித்த கீசி நிறுவனத்தின் பட்டியலை தற்போது பார்ப்போம்.
1. சிங்கப்பூர்
2. வாஷிங்டன்
3. ஆஸ்டின்
4. பெர்ன்
5. ஜூரிச்
6. ஜெனீவா
7. சான் பிரான்சிஸ்கோ
8. பாஸ்டன்
9. ஸ்டாக்ஹோம்
10. லிவர்பூல்
Ten best cities for work from home
Ten best cities for work from home | வொர்க் ஃப்ரம் ஹோம் பணிக்கு எந்தெந்த நகரங்கள் பெஸ்ட்?