"10 ஆண்டுகளில் 261 கோடி மரங்களை வளர்க்க திட்டமிட்டுள்ளோம்!" -வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்!

தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் ‘பசுமை தமிழகம்’ என்ற 10 ஆண்டு தொலை நோக்குத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு களமிறங்கியிருக்கிறது. இது குறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் பசுமைக்குழுவினருடனான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் அலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களுடன் வனத்துறை அமைச்சர் கருத்துகளை கேட்டறிந்தார்.

பசுமை தமிழகம் சம்பந்தமான கூட்டம்

அப்போது பேசிய வனத்துறை அமைச்சர்,” தமிழ்நாட்டில் தற்போது 23.79 சதவிகித வனப்பகுதிகள் மட்டுமே உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவிகிதமாக உயர்த்த தமிழக அரசு ‘பசுமை தமிழகம்’ என்ற திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறது. 261 கோடி மரக்கன்றுகளை நடவு செய்து உயிர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நடப்பு ஆண்டில் 2.50 கோடி மரக்கன்றுகள் தயாராகி வருகின்றன. அடுத்தடுத்த ஆண்டுகளில் 31 அல்லது 32 கோடி மரக்கன்றுகளை நடவு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

நமது முதல்வர் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி மாநிலத்தில் வனப்பகுதியின் அளவினை உயர்த்திட வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார். இதன் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் மரங்களை வளர்த்து இயற்கையை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்.

கூட்டத்தில்

நீலகிரி மாவட்டத்தில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வருவாய்த்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்கள் மற்றும் அந்தந்தத் துறைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காலியிடங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறிந்து, மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து இந்தத் திட்டத்தினை வெற்றிக்கரமாகச் செயல்படுத்த வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.