19 வயதில் கல்லூரியில் இருந்து விலகி, 24 வயது பில்லியனரான இளைஞர்: எப்படி சாத்தியம்?

19 வயதில் கல்லூரியிலிருந்து விலகிய இளைஞர், 24 வயதில் உலகின் பில்லியனர்களின் ஒருவராக மாறி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை பார்ப்போம்.

அமெரிக்காவை சேர்ந்த அலெக்சாண்டர் வேங் என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு தனது 19 வயதில் கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு ஸ்கேல் ஏ.ஐ (Scale AI) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் முதலில் மூன்று ஊழியர்கள் மட்டுமே பணி புரிந்தனர் என்பதும், அந்த மூன்று ஊழியர்களும் அந்த நிறுவனத்தை இளக்காரமாக பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது அந்த நிறுவனம் 300 பணியாளர்களை கொண்டு உள்ளது என்பதும் இந்த நிறுவனத்தின் மதிப்பு 3.5 பில்லியன் டாலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அலெக்சாண்டர் வேங் உருவாகியுள்ளார்.

இளம் வயதில் வீடு வாங்குவது ஸ்மார்ட்டான முடிவு.. ஏன் தெரியுமா?

பாதியில் நிறுத்திய படிப்பு

பாதியில் நிறுத்திய படிப்பு

எம்ஐடி கல்லூரியில் இருந்து 19 வயதில் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அதன் பிறகு என்ன ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கலாம்? என ஆலோசனையில் அவர் இருந்தபோது, ஏஐ நிறுவனத்தை நடத்திய ஒருவரை சந்தித்தது தான் அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம் ஆகும்.

ஸ்கேல் ஏ.ஐ

ஸ்கேல் ஏ.ஐ

இதனை அடுத்து தானே ஒரு ஏஐ நிறுவனத்தை நிறுவும் யோசனையை நிறைவேற்றினார். ஸ்கேல் ஏ.ஐ. நிறுவனத்தை தொடங்கிய மூன்று ஆண்டுகளில் யூனிகார்ன் அந்தஸ்த்துக்கு வளர்ந்தது என்பது மட்டுமின்றி இன்று உலகின் முக்கிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. OpenAI, Lyft, Nuro, Airbnb, Samsung மற்றும் Pinterest ஆகியவை ஸ்கேல் ஏஐ நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் ஆகும்.

அயராத உழைப்பு
 

அயராத உழைப்பு

வருங்காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை இன்னும் பல துறைகளில் பயன்படுத்த முடியும் என்ற இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கும் அலெக்சாண்டர் வேங், பல சவால்களை எதிர் கொண்டாலும் உலகின் முன்னணி ஏ.ஐ. நிறுவனமாக தனது நிறுவனத்தை தனது அயராத உழைப்பில் கொண்டு சென்றுள்ளார்.

அறிவியல் அறிவு

அறிவியல் அறிவு

அலெக்சாண்டர் வாங் பெற்றோர்கள் இயற்பியலாளர்கள் என்பதால் அவர் குழந்தை முதலே நுணுக்கமான அறிவியல் அறிவைப் பெற்றிருந்தார். அந்த அறிவியல் அறிவுதான் இன்று அவரை தொழில்துறையின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அமெரிக்க ராணுவம்

அமெரிக்க ராணுவம்

இன்று அவருடைய ஸ்கேல் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை தான் அமெரிக்காவின் விமானப் படையும், ராணுவமும் பயன்படுத்தி வருகின்றன. இந்நிறுவனம் அமெரிக்க விமானப்படை மற்றும் அமெரிக்க இராணுவத்துடன் சுமார் 110 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பது இன்னொரு ஆச்சரியப்படத்தக்க அம்சங்களில் ஒன்று.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்

கடந்த 2018ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் 30 வயதுக்குட்பட்ட பில்லியனர்கள் பட்டியலில் அலெக்ஸாண்டர் வேங் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How the 24 year old founder of Scale AI a billionaire?

How the 22 year old founder of Scale AI a billionaire? | 19 வயதில் கல்லூரியில் இருந்து விலகி, 24 வயது பில்லியனரான இளைஞர்: எப்படி சாத்தியம்?

Story first published: Thursday, May 26, 2022, 13:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.