கரோலினா:
கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்த நார்ம் செல்ப் என்ற 83 வயது ஓய்வு பெற்ற பாதிரியார் ஆபாச பட நடிகராக மாறினார். தனது வாழ்வின் பெரும் பகுதியை கிறிஸ்தவ ஆலயத்திலேயே செலவிட்டு வந்த அவர் தனது ஆபாச பட வாழ்வில் இருந்து கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஆன்மீக வாழ்வின் மகிழ்ச்சியான பகுதியாகதான் நாம் செக்ஸை நினைக்க வேண்டும். செக்ஸ் என்பது ஒரு விருந்தில் கலந்து கொள்வது போன்றது. அதனாலேயே இந்த தொழிலை செய்வதில் நான் விருப்பம் கொண்டு இருக்கிறேன். கேமராவுக்கு முன் மேற்கொள்ளும் இந்த தொழிலை நான் கட்டணம் எதுவும் பெறாமலேயே செய்து வருகிறேன்.
ஆபாச பட நடிகராக இருப்பதில் கிடைத்த அனுபவம் மகிழ்ச்சியானது. உண்மையில் எனது உடல் ஒரு கோவில் என்பதை நான் சமீப நாட்களில்தான் கண்டறிந்து கொண்டேன். செக்ஸில் நெருங்கிய உறவுநிலை மற்றும் மெய்மறந்த இன்பம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும். இது ஆன்மீகத்திற்கு ஒப்பானது.
செக்ஸ் சார்ந்த விசயங்களை ஆபத்து என கூறி வரும் சமூகம், அந்த எண்ணத்தை மாற்றும் வரை நான் ஆபாச படங்களில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டு உள்ளேன். ஆபாசம் (போர்ன்) என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஓர் அழுத்தப்பட்ட சுற்று சூழலில் இருந்து இறுதியாக வெளியே வந்து, ஒவ்வொரு மரபுசார்ந்த விதிகளில் இருந்தும் வெளியே வந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதற்குதான் இந்த சமூகம் போர்ன் என பெயரிடப்பட்டு உள்ளது. ஆபாச பட நாயகன் பட்டம் தழுவியதில் தனக்கு மகிழ்ச்சிதான்.
இவ்வாறு நார்ம் செல்ப் கூறுகிறார்.