கடந்த 24 மணி நேரத்தில் எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 7 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது என்றாலும், 2022 ம் ஆண்டில் அவர் 70 பில்லியன் டாலரை இழந்தார் என ப்ளூம்பெர்க் குறியீடு வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.
புதன்கிழமை, எலோன் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு, டெஸ்லாவின் பங்குகளில் சுமார் 5 சதவீதத்துடன் மீண்டும் 200 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றாலும், இந்த ஆண்டு எலோன் மஸ்கின், நிகர சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இழந்து விட்டார். அதாவது ரூ. 5.45 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளார். 2022ம் ஆண்டு பிறந்து 145 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், 145 நாட்களில் எலோன் மஸ்க் ஒவ்வொரு நொடிக்கும் 4 லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு, டெஸ்லாவின் பங்குகள் வீழ்ச்சியினால், அவரது நிகர சொத்து மதிப்பு 193 பில்லியன் டாலராகக் குறைந்தது.
இது அவரது நிகர சொத்து மதிப்பு, கடந்த 9 மாதங்களில் மிகக் குறைந்த அளவாகும். இந்த ஆண்டு எலோன் மஸ்க் எந்த அளவிற்கு நஷ்டம் அடைந்துள்ளார் என்பதை பார்க்கலாம்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில்,எலோன் மஸ்க் இந்த ஆண்டு 70.3 பில்லியன் டாலர்களை இழந்து விட்டார். அதாவது ரூ. 54,50,67,53,50,000 இழப்பை சந்தித்துள்ளார். அதன் பிறகும் அவரது நிகர சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்கள் அதாவது 1,55,09,50,00,00,000 ரூபாயாக உள்ளது.
உலகின் பணக்காரர் எலோன் மஸ்க் 131 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்கார பில்லியனர் ஜெஃப் பெசோஸை விட 69 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை அதிகம் வைத்துள்ளார். இந்த ஆண்டு உலகின் பல பில்லியனர்களின் நிகர சொத்து மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. முதல் 10 இடங்களில் ஒரு சில பில்லியனர்களின் நிகர சொத்து மதிப்பு மட்டுமே அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், எலோன் மஸ்க் ஒவ்வொரு நொடிக்கும் 4 லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்துள்ளார். அவரது இழப்பை கணக்கிட்டால் 145 நாட்களில் ஒரு நாளைக்கு ரூ.37,58,57,25,310 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது எலோன் மஸ்க் ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,56,60,71,888 இழப்பை சந்தித்துள்ளார். நிமிடத்தில் பார்க்கும் போது, எலோன் மஸ்க் ஒவ்வொரு நிமிடமும் தனது நிகர மதிப்பில் ரூ.2,61,01,198 இழந்துள்ளார். அதாவது எலான் மஸ்கின், நிகர சொத்து மதிப்பில் இருந்து ஒவ்வொரு நொடியிலும் ரூ.4,35,020 குறைந்துள்ளது.
மேலும் படிக்க | இனி ட்விட்டரை பயன்படுத்த கட்டணம் வசூல்; எலோன் மஸ்கின் அதிரடி திட்டம்
புதன்கிழமை பங்குச் சந்தை முடிவடையும் போது, டெஸ்லா பங்குகள் 5 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளன. இதன் காரணமாக எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு சுமார் 7.30 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. எலான் மஸ்க் டெஸ்லாவில் 15 சதவீத பங்குகளை வைத்துள்ளார். பங்குகள் வீழ்ச்சியடைந்தால், அவற்றின் நிகர மதிப்பு குறையும். பங்குகளின் விலை அதிகரிக்கும் போது, அவரின் சொத்து மதிப்பு உயர்கிறது. நவம்பர் மாதத்தில், எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு 340 பில்லியன் டாலர்களை எட்டியது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | புதிய ட்விட்டர் CEO நியமிக்க எலோன் மஸ்க் திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் ஊழியர்கள்
எனினும், 2022 ம் ஆண்டில் சில உலக பணக்காரர்களின் சொத்து அதிகரித்துள்ளது. கெளதம் அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் குறியீட்டின் தரவுகள் கூறுகின்றன. உலகின் 6வது பணக்காரரான இவரின் நிகர சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் கீழே குறைந்தாலும், கடந்த 145 நாட்களில் அவரது நிகர மதிப்பு 22.8 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. உலகின் 8வது பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பும் 5.46 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. வாரன் பஃபெட்டின் பெயரும் சொத்து மதிப்பு அதிகரித்தவர்களின் பட்டியலில் உள்ளது. அவரது சொத்தின் நிகர மதிப்பு $ 2.82 பில்லியன் அதிகரித்து $112 பில்லியன் டாலராக உள்ளது. இவர் உலகின் 5 வது பணக்காரர் ஆவார்.
மேலும் படிக்க | எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR