Redmi 10: விரைவில் இந்தியா வரும் ரெட்மி 10 பிரைம் பிளஸ் பட்ஜெட் 5ஜி போன்!

சியோமி நிறுவனம் சமீபத்தில் ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்போது நிறுவனம் இந்த தொடரை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில்
ரெட்மி 10 பிரைம் பிளஸ்
போன் விரைவில் இந்தியாவுக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த போன், இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் பக்கத்தில் பதிவு செய்வதற்காக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், இந்த போனுக்கான அப்டேட் லிங்கும் இணையத்தில் வெளியாகியுள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Redmi: 144Hz டிஸ்ப்ளே, 64MP சாம்சங் கேமரா – ரெட்மி நோட் 11டி ப்ரோ+ அறிமுகம்!

கிடைத்த தகவல்களின்படி, இந்த
Redmi 10 Prime Plus
ஸ்மார்ட்போனானது, சீனாவில் வெளியான ரெட்மி நோட் 11E மொபைலின் மறுபதிப்பாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

OnePlus 10R 5G: ஒன்பிளஸ் ஃபேன்ஸ்… ஒன்பிளஸ் 10R இப்போது ரூ.13,000 தள்ளுபடி விலையில்!

ரெட்மி நோட் 11E அம்சங்கள் (Redmi Note 11E Specifications)

சீனாவில் வெளியான ரெட்மி நோட் 11E ஸ்மார்ட்போனானது, மீடியாடெக் டைமென்சிட்டி 700 5ஜி புராசஸர் கொண்டு இயக்கப்படுகிறது. மேலும், 4ஜிபி / 6ஜிபி ரேம் வேரியண்டுகள் வழங்கப்படும். ஸ்டோரேஜ் மெமரியாக 128GB இருக்கும். எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக ஸ்டோரேஜை 1TB வரை நீட்டிக்க முடியும்.

மொபைலில் 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடன் வரும் 6.58″ இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே, 1080×2408 பிக்சல் ரெசலியூஷனுடன் இருக்கும். ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI ஸ்கின் இதில் நிறுவப்பட்டிருக்கும்.

DigiLocker: அரசின் டிஜிலாக்கர் இப்போது வாட்ஸ்அப் செயலியில்!

ஸ்மார்ட்போன் கேமரா பொருத்தவரை பின்புறம் 50MP மெகாபிக்சல் f/1.8 சென்சாரும், 2MP மெகாபிக்சல் போர்ட்ரேட் சென்சாரும் அடங்கிய இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 5MP மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் ரெட்மி 5ஜி போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. போனை சக்தியூட்ட 5,000mAh பேட்டரியும், அதனை ஊக்குவிக்க 18W வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் பயனர்களுக்கு கிடைக்கும். இந்த போன் ரூ.12,000 விலைக்குக் கீழ் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi Mi Band: விற்பனையில் புரட்சி செய்த Mi பேண்டின் அடுத்த மாடல் ரிலீஸ்!

சியோமி பேண்ட் 7 வெளியீடு

சீனாவில் சியோமியின் புதிய ஸ்மார்ட் பேண்ட் 7 வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்டுகளில் ஸ்மார்ட் பேண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்று NFC உடனும், மற்றொன்று NFC இல்லாமலும் விற்பனைக் கொண்டுவரப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

புதிய சியோமி மி ஸ்மார்ட் பேண்டில் 1.62″ இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, உடலை கண்காணிக்கும் SpO2 போன்ற முக்கிய சென்சார்கள், NFC போன்றவை இருக்கும். இதன் விலை ரூ.3,999 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.