நீங்கள் விரிவான தோல் பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்றினாலும் அல்லது அடிப்படை க்ளென்சர், டோனர், மாய்ஸ்சரைசர் (CTM) படிகளை நம்பினாலும், சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தாமல் அது முழுமையடையாது.
புற ஊதா கதிர்கள் தோலில் ஊடுருவி, பெரும் தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கு தெரியும். “உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, சன்ஸ்கிரீன் தவறாமல் பயன்படுத்துவதுதான் என்று தோல் மருத்துவர் மேக்னா குப்தா கூறினார்.
சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதன் பல முக்கிய நன்மைகளை இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் இடம் அவர் பகிர்ந்து கொண்டார். “இது முன்கூட்டிய முதுமை, கொலாஜன் முறிவு, தோல் எரிதல், தோல் நிறமாற்றம் ஆகியவற்றைத் தடுக்கிறது, மேலும் புற்றுநோய் மற்றும் அழற்சியின் அபாயத்தையும் குறைக்கிறது.”
நீங்கள் என்ன சன்ஸ்கிரீன் (SPF) தேர்வு செய்ய வேண்டும்?
பல்வேறு வகையான சன்ஸ்கீரின்ஸ் சந்தையில் கிடைக்கின்றன, எனவே உங்களுக்காக சரியானதைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்படலாம். எனவே, இந்திய தட்பவெப்ப நிலையை மனதில் வைத்து, இந்தியர்களுக்கு மிகவும் பொருத்தமான சன்ஸ்கிரீனை பரிந்துரைக்குமாறு தோல் மருத்துவரிடம் கேட்டோம்.
SPF 30 அல்லது அதற்கு மேற்பட்டவை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பை வழங்குவதால் மிகவும் பொருத்தமானது. 30 என்பது பிராட் ஸ்பெக்ட்ரம்க்கு (broad-spectrum) சமமானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்,” என்று அவர் பதிலளித்தார்.
“அதிக SPF, ஒளியின் பல்வேறு அலைநீளங்களுக்கு எதிராக நீண்ட பாதுகாப்பு அளிக்கிறது. பிராட் ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீன் UVA, UVA infra-red, HEV லைட் மற்றும் ப்ளூ லைட்டுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.
“இந்தியா’ மலைகள் முதல் கடற்கரைகள் வரை, பல்வேறு உயரங்களில் மிகப்பெரியதாக இருப்பதால் – 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கீரின் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பை வழங்குகிறது,” என்று அவர் விளக்கினார்.
மினரல் அல்லது கெமிக்கல்?
உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காமல் சிறந்த பாதுகாப்பிற்கு, மினரல் சன்ஸ்கிரீன் பரிந்துரைக்கப்படுகிறது,
குறிப்பாக விளையாட்டு அல்லது வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு, அவர்கள் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பதால், நடைமுறையில், மினரல் சன்ஸ்கிரீனைப் பரிந்துரைக்கிறோம். இதேபோல், குழந்தைகள் அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு, மினரல் சன்ஸ்கிரீன் பரிந்துரைக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“