விஜய் 66 படத்தில் ஏற்கெனவே நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கி இருக்கையில் புதிதாக மெஹ்ரீன் பிர்ஸாடா இணைய இருப்பதாக வட்டராங்கள் தெரிவிக்கின்றன. யார் இந்த மெஹ்ரீன் பிர்ஸாடா?
மெஹ்ரீன் பிர்ஸாடா 2016 தெலுங்கில் வெளிவந்த Krishna Gaadi Veera Prema Gaadha என்கிற படத்தில் அறிமுகமாகிறார். நானி அந்தப் படத்தின் ஹீரோ.
தமிழில் 2017-ல் அறிமுகமாகிறார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த `நெஞ்சில் துணிவிருந்தால்’ ஹீரோயின் இவர்தான்.
இவர் நடித்த `Mahanubhavudu’ ரொமான்டிக் படம் தெலுங்கில் ஹிட். `எங்கேயும் எப்போதும்’ படத்தின் ஹீரோ சர்வானந்த்தான் இந்தப் படத்தின் ஹீரோ.
`Raja The Great’ மற்றும் `F2: Fun and Frustration’ ஆகிய ஹிட் கொடுத்த தெலுங்கு படங்களுக்கு பிறகு தனுஷின் `பட்டாஸ்’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கிறது.
விஜய் 66 படத்தில் ராஷ்மிகா ஏற்கெனவே கதாநாயகியாக இருக்க மெஹ்ரீனுக்கு நடிப்பது உறுதி செய்யப்பட்டால் அவரின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை.
மெஹ்ரீன் பூர்விகம் பஞ்சாப். இவர் மாடலிங் ராம்ப் வாக் ஆரம்பித்த வயது 10. Miss Personality South Asia Canada 2013 உள்ளிட்ட ஏராளமான பட்டங்களைப் பெற்றிருக்கிறார்.
அனுஷ்கா சர்மா, தில்ஜீத், சுராஜ் ஷர்மா ஆகியோருடன் இணைந்து Phillauri என்கிற படத்தில் நடித்தார் மெஹ்ரீன். ஹிந்தியில் இவருக்கு முதல் படம் இது தான்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஹிந்தி என பான் இந்தியா ஹீரோயினான மெஹ்ரீன் விஜய் 66 படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றி வந்து கொண்டிருக்கும் அறிவிப்புகள், விஜய் 66 படத்திற்கு இப்போதிருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.