தாயின் கண்முன்னே மகன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் தருண்குமார் தாய் கிருஜாவின் சகோதரரானரமேஷ் (தாய்மாமன்) என்பவரின் வீட்டில் தங்கி குடியாத்தத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், ரமேஷின் மகள் ஆண் நண்பர் ஒருவரை நேரில் சந்தித்து பேசுவதாக தருண் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ் மகளை பற்றி தவறாகபேசிகிறாயா என கேட்டு தாக்கியுள்ளார். இதுகுறித்து தருண் தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னை குறித்து பேச அண்ணன் வீட்டிற்கு வந்த கிரிஜா இது குறித்து கேட்டுள்ளார்.
அப்போது ரமேஷ் மற்றும் அவரது மனைவி மகன் ஆகியோர் சேர்ந்து கொண்டு மீண்டும் தருண்குமார் மற்றும் தாய் கிரிஜாவை தாக்கியுள்ளனர். இதில், தருண் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தாய்மாமன் ரமேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.