அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
இது தொடர்பில் விளக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.
வரவிருக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தவிர அனைத்து அமைச்சகங்களுக்கும் ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு குறித்து வெளியான செய்தி
எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலக தரப்புக்களை கோடிட்டு கொழும்பின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வு! ரணிலின் ஏற்பாடு! |
நல்லாட்சியில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் |