சமீபத்திய ஆண்டுகளாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பர்சனல் கேர் பொருட்கள் என பலவும் வாங்குவது அதிகரித்துள்ளது. ஆனால் ஆசை ஆசையாய் வாங்கிய பொருட்கள் கைக்கு வந்து சேருவதற்கு பல நாட்கள் ஆகும்.
ஆனால் இன்று அப்படி இல்லை. நீங்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
சொல்லப்போனால் இ- காமர்ஸ் துறையில் அதிகரித்து வரும் போட்டிகளுக்கு மத்தியில், டெலிவரி நாட்களை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்களை கவர முடியும் என நிறுவனங்கள் நினைக்கின்றன.
நீங்களே இறக்குமதி செஞ்சுக்கோங்க: அனுமதி வழங்கிய இலங்கை அரசு!
48 மணி நேரத்திற்குள் டெலிவரி
அந்தவகையில் நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் பேஷன் நிறுவனமான மிந்த்ரா எக்ஸ்பிரஸ் டெலிவரி என்ற டெலிவரி ஆப்சனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் 24 – 48 மணி நேரத்திற்குள் டெலிவரி கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. ஆக வாடிக்கையாளர்கள் ஆசையாய் ஆர்டர் செய்யும் பொருட்களை விரைவில் பெற முடியும்.
3 லட்சம் ஸ்டைல்கள்
ஆன்லைன் பேஷன் மற்றும் பியூட்டி நிறுவனமான மிந்த்ரா, இந்த எம் எக்ஸ்பிரஸ், 3 லட்சம் ஸ்டைல்கள் மற்றும் 1300-க்கும் மேற்பட்ட குறியீடுகளை கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த எம் எக்ஸ்பிரஸ் வாடிக்கையாளார்கள் இந்த டெலிவரி காலக்கெடுவின் அடிப்படையில் பொருட்களை பெறலாம் என மிந்த்ராவின் தலைமை செயல் அதிகாரி நந்திதா சின்ஹா தெரிவித்துள்ளார்.
விரைவில் விரிவாக்கம்
மிந்த்ராவின் இந்த அம்சம் பெரு நகரங்களில் கிட்டதட்ட 30% அளவுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இது டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களுக்கு விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மிந்த்ரா என்ன செய்கிறது?
மிந்த்ரா ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், அழகு சாதன பொருட்கள் என பலவற்றையும் விற்பனை செய்து வருகின்றது. அதில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பிடித்தமான உடைகள், பேக்குகள், உள்ளாடைகள், பர்சனல் கேர் பொருட்கள், காலணிகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் என பல வகையான பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. இது வாடிக்கையாளார்களுக்கு மிக எளிதாக ஷாப்பிங் செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
myntra introduces new X-press delivery option, Client receive orders with in 24 – 48 hours
Fashion & Beauty has introduced the Mintra Express Delivery option. It has also announced that delivery will be available within 24 – 48 hours.