இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் கடந்த 2020இல் 3,66,138 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த சாலை விபத்துகளில் 1,20,806 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3,48,279 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் அதிகமான சாலை விபத்துகளில் (45,848) தமிழகம், அதிகமான உயிரிழப்பில் உத்தரப் பிரதேசமும்(19,149) முதலிடத்தில் உள்ளன என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2020ல் பதிவான சாலை விபத்துகளில் 1,20,806 அபாயகரமான விபத்துகள் நடைபெற்றதாகவும், இதில் 35.9 சதவீதம் தேசிய நெடுஞ்சாலையிலும், 25 சதவீதமும் மாநில நெடுஞ்சாலைகளிலும், 39.1% பிற சாலைகளிலும் விபத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.