இந்தியாவில் ஆண்களுக்குச் சரி, பெண்களுக்கும் சரி தங்கம் மீதான ஆசை எந்த நாளும் குறைந்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதேபோல தான் இந்திய அரசுக்கும், தங்கத்தை டன் கணக்கில் வாங்கிக் குவித்து வைத்துள்ளது.
இந்திய அரசு எவ்வளவு தங்கத்தை வாங்கிக் குவித்து வைத்துள்ளது தெரியுமா..?
சென்னை-யில் இன்றைய தங்கம் விலை நிலவரம்
இந்திய மக்கள்
இந்திய மக்கள் தங்கத்தை வெறும் நகைகளுக்காக மட்டும் வாங்குவது இல்லை, தங்கம் என்பது நடுத்தர மக்களுக்கு ஒரு நீண்ட கால முதலீடு. இந்த முதலீடு வீடு கட்ட உதவும், கார் வாங்க உதவும், கல்லூரி படிப்புக்கு உதவும், கொரோனா போன்ற மோசமான நிலையில் உதவும், பெண் குழந்தை திருமணத்திற்கு உதவும், அவசர மருத்துவச் செலவுகளுக்கு உதவும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
மத்திய அரசு
இதேபோலத் தான் அரசுக்கும் நாணய மதிப்பை சரி செய்யவும், உபரி நிதியைப் பாதுகாப்பான முதலீடாக மாற்றவும், பொருளாதாரத்தை வலிமைப்படுத்தவும், பணவீக்கத்தைக் குறைக்கவும், நாணய பற்றாக்குறையைச் சரி செய்யவும் எனத் தங்கத்தை அதிகளவில் வாங்கவும், விற்கவும் செய்கிறது.
65 டன் தங்கம்
இதன் படி மத்திய அரசின் நிதிகளை நிர்வாகம் செய்யும் ஆர்பிஐ 2022ஆம் நிதியாண்டில் தங்கம் முந்தைய வருடத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகத் தங்கத்தை வாங்க முடிவு செய்து சுமார் 65 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இதன் மூலம் ஆர்பிஐ-யின் மொத்த தங்கம் இருப்பு 760.42 டன்னாக உயர்ந்துள்ளது.
3.22 லட்சம் கோடி ரூபாய்
இதில் முக்கியமாக ஜூன் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான 9 மாத காலகட்டத்தில் ஆர்பிஐ சுமார் 33.9 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. மேலும் 2022ஆம் நிதியாண்டில் தங்க இருப்பின் மதிப்பு 30 சதவீதம் அதிகரித்து 3.22 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஆர்பிஐ அறிக்கை
கூடுதல் கொள்முதல் மற்றும் தங்கத்தின் விலை உயர்வு மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்புச் சரிவு ஆகிய காரணங்களால் 2022ஆம் நிதியாண்டில் தங்க இருப்பின் மதிப்பு 30 சதவீதம் அதிகரித்து 3.22 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா 11,041 மில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை வைத்துள்ளது.
Do you know how much tonnes of gold Reserve Bank of India holds
Do you know how much tonnes of gold Reserve Bank of India holds இந்தியாவில் எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா.. கேட்டா ஆடிப்போயிருவீங்க..!