அமெரிக்காவின் டெக்சாஸ் பாடசாலையில் கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிர் தப்பிய 11 வயது சிறுமி வெளியிட்ட சில்லிட அவைக்கும் தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுமி இரத்த வெள்ளத்தில் இறந்தது போல் நடித்து உயிர் தப்பியதாக கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை உவால்டேவில் உள்ள ராப் துவக்கப்பள்ளியில் 18 வயதேயான சால்வடார் ராமோஸ் என்ற இளைஞர் முன்னெடுத்த கொலைவெறி தாக்குதலில் 19 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த கொடூர துப்பாக்கிச் சூட்டில் 11 வயதேயான மியா செரிலோ என்ற நான்காவது வகுப்பு மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
தமது ஆசிரியர்கள் இருவர் மற்றும் சக மாணவர்கள் அனைவரும் கொல்லப்படுவதை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, தமது தோழி ஒருவர் இரத்தவெள்ளத்தில் சடலமாக கிடக்க, சமயோசிதமாக மியாவும் இரத்தத்தை பூசிக்கொண்டு, இறந்தது போல் நடித்துள்ளார்.
மியா லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
இருப்பினும், நடந்த கொடூர சம்பவத்தில் இருந்து மீள போராடுவதாகவும், அதிர்ச்சியில் இருந்து இன்னமும் அவர் முழுமையாக மீளவில்லை எனவும் அவரது அத்தை தெரிவித்துள்ளார்.
மியா போன்று இன்னொரு நான்காவது வகுப்பு மாணவரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.
மேஜை ஒன்றின் கீழே ஒளிந்து கொண்டு அந்த மாணவரும் அவரது நண்பர்களும் தப்பியுள்ளனர்.
இதனிடையே, கொல்லப்ப 10 வயது அமெரி ஜோ கார்சா துணிச்சலாக 911 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனிடையே, கொல்லப்பட்ட அனைவரும் அமெரி ஜோவின் வகுப்பறையில் இருந்தவர்கள் என பொலிசார் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.