இளையராஜாவிடம் மன அமைதி தேடும் ரஜினிகாந்த்
5/27/2022 3:48:21 PM
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும், இசைஞானி இளையராஜாவும் மிகுந்த நட்போடு பழகுகிறவர்கள். இளையராஜாவை ரஜினி எப்போதும் சாமி என்றே அழைப்பார். இருவரும் தனிப்பட்ட குடும்ப விஷயங்களை கூட பகிர்ந்து கொள்வார்கள். இளையராஜா தற்போது கோடம்பாக்த்தில் சொந்தமாக ஸ்டூடியோ அமைத்துள்ளார். மன அமைதி தேவைப்படும்போதெல்லாம் இந்த ஸ்டூடியோவுக்கு செல்வதை ரஜினி வழக்கமாக வைத்துள்ளார். அங்கு நெடுநேரம் செலவு செய்து அமர்ந்து இளையராஜாவின் பாடல்களை கேட்பார். அவர் பணியாற்றுவதை பார்த்து ரசிப்பார். விரைவில் இளையராஜா கோவையில் பிரமாண்ட கச்சேரி ஒன்றை நடத்துகிறார். இதற்கான ரிகல்சல் நடப்பதை கேள்விட்டு இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு சென்று அதை பார்த்து ரசித்துள்ளார் ரஜினி.
சென்னை போயஸ்கார்டன் வீட்டில் ரஜினிகாந்தை, இளையராஜா சென்று சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரிக்க, ‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார். அப்படியா..நானும் அங்கே வருகிறேன் என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார்.