இரு நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடக்கப்பட்டதற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
பிப்ரவரி மாத இறுதியிலிருந்து உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, முக்கிய நகரங்களை கைப்பற்ற கிழக்கு உக்ரைனில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தியுள்ளது.
அதேசமயம், உக்ரைன்-ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை முடக்கப்பட்டதற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
ரஷ்யா அரசாங்க செய்தி தொடர்பாளர் Dmitry Peskov கூறியதாவது, உக்ரைன் தலைமை தொடர்ந்து முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுகிறது.
ரஷ்ய சட்டமன்றத்தில் அதிபர் புடினுக்கு கடும் கண்டனம்!
இதனால் உக்ரேனிய தரப்பு விரும்புவதை எங்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.
அதேசமயம் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய பலமுறை முயற்சித்ததாகவும், ஆனால் ரஷ்யா இன்னும் தீவிரமான சமாதானப் பேச்சுகளுக்குத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.