ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டால் அதனை முடக்கவோ அல்லது அழிக்கவோ தயாராக இருப்பதாக சீன அரசின் ராணுவ ஆராய்ச்சியாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
உலகின் முதன்மை பணக்காரகளில் ஒருவர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்-கின் கனவு திட்டமாக. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளின் தகவல் தொடர்பு திட்டம் உள்ளது.
இந்த ஸ்டார்லிங்க் திட்டத்தின் முலம் உலக அளவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வணிக மற்றும் ராணுவ பயனர்களுக்கு அகன்ற வரிசையிலான அலைவரிசை சேவையை வழங்கி வருகிறது.
இவ்வாறு அகன்ற அலைவரிசை சேவையை வழங்கும் ஸ்டார்லிங்க்கு சொந்தமான இரண்டு செயற்கைக்கோள்கள் சமீபத்தில் சீனாவின் விண்வெளி ஆய்வு மையத்தை நெருங்கி சென்றது பெரும் சர்ச்சையாக ஏற்பத்தியது.
இந்தநிலையில் சீன தேசிய நாட்டிற்கு ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என சீனாவால் கருத்தப்பட்டால் அவற்றை செயலிலக்க வைக்கவோ அல்லது நிரந்தரமாக அழிக்கவோ சீனாவால் முடியும் என அந்த நாட்டின் ராணுவ அதிகாரி எச்சரித்துள்ளார்.
தாழ்வான புவி வட்டப் பாதையில் சுமார் 2,300க்கும் அதிகமான செயற்கைக்கோள்களுடன் நிலை கொண்டிருக்கும் ஸ்டார்லிங்க் சேவை பொதுவாக அழியாதது என்று நம்பப்படும் வேளையில் சீன அதிகாரியின் இந்த எச்சரிக்கை உலக நாடுகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: டெக்சாஸ் துப்பாக்கி சூடு: மனைவி இறந்த சோகம் தாங்காமல் உயிரிழந்த கணவர்!
மேலும் சீனாவின் இந்த எச்சரிக்கைக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும், அமெரிக்க அரசிற்கும் இடையே இருக்கும் நெருங்கிய உறவே காரணம் என சொல்லப்பட்டாலும், ஸ்டார்லிங்க்-க்கு போட்டியாக சீனாவும் உலக அளவில் இணைய அணுகலை வழங்க, Xing Wang – ஸ்டார்நெட் (StarNet) என்னும் திட்டத்தை சீனா தொடங்கியுள்ளது என்பதே முக்கிய காரணம் என பார்க்கப்படுகிறது.