கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை எடுப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள மென்பொருள் உரிய முறையில் செயற்படாமையினால், கடவுச்சீட்டுக்காக ஒன்லைன் முறையில் புகைப்படங்களை எடுக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மென்பொருளின் தொழிற்பாடு 95 வீதம் செயலிழந்துள்ளதாக புகைப்பட நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் புகைப்பட நிறுவனங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு
ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது திகதி மற்றும் நேரம் ஆகியவற்றை முன்பதிவு செய்து கொண்டு வருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், பலர் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வருவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.