காஷ்மீர்: தொலைக்காட்சி நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் 24 மணிநேரத்தில் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகையை கொலை செய்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இரண்டு பேரும் 24 மணி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  

கடந்த மூன்று நாட்களில் ஜெய்ஷ்-இ-முகமது  அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 7 பேர் உட்பட 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி.விஜயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை அமரீன் பட்டை கொலை செய்த பயங்கரவாதிகள் இரண்டு பேரை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து சுட்டுக் கொலை செய்ததாக ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட நடிகையுடன் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான சிறுமி தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
image

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களில் நடந்த இரண்டு வெவ்வேறு என்கவுன்டர்களில் பெண் தொலைக்காட்சி நடிகையை சுட்டுக் கொன்ற இருவர் உட்பட 4 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நேற்று கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் உள்ள அகன்ஹன்சிபோரா பகுதியில் ஒரு என்கவுன்டர் நடந்ததாகவும், தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் கொல்லப்பட்டதற்கு காரணமான இரண்டு பயங்கரவாதிகள் புட்காம் மாவட்டத்தில் நடந்த  என்கவுண்டரில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.